பிரதான செய்திகள்

மன்னாரில் கட்டுப்பணம் செலுத்தியது மஹிந்த அணி

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.

மன்னார் தேர்தல் அலுவலகத்தில் நேற்றைய  தினம்(11) மாலை 3 மணியளவில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வடமாகாணத்திற்கான அமைப்பாளரும், வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சருமான எஸ்.எம்.ரஞ்சித் சமரகோண் தலைமையில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில், மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை, முசலி பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை, ஆகிய 5 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கட்டுப்பணம் செலுத்த சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தர்கள் மன்னார் தேர்தல் அலுவலகத்திற்கு வருகை தந்த போது ஆதரவாளர்களும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

விசேட அதிரடிப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி..!!!

Maash

ஷாபிக்கு எதிராக முறைப்பாடு செய்த பெண் ஒருவர் கர்ப்பமடைந்துள்ளார்.

wpengine

GCE A/L மேலதிக வகுப்புக்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை!

Editor