பிரதான செய்திகள்

மன்னாரில் உயிரியல் விஞ்ஞானம் பிரிவில் முஸ்லிம் மாணவி முதலாம் இடம்

நடந்து முடிந்த 2018ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மன்னார் சித்தி விநாயகர் இந்து தேசிய கல்லூரியின் மாணவி உயிரியல் விஞ்ஞானம் பிரிவில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.

மன்னார் மாவட்டத்தின் ஏ.ஆர்.ரைஷா பர்வின் என்ற மாணவியே மாவட்ட நிலையில் முதலிடத்தினையும், தேசிய ரீதியில் 666ஆம் இடத்தினையும் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.

குறித்த மாணவி கருத்து தெரிவிக்கையில்,

சிறந்த மகப்பேற்று நிபுணராக வர வேண்டும் என்பதே எனது எதிர்கால இலட்சியம்.
எனது கல்வி செயற்பாட்டிற்கு உறுதுணையாக இருந்த பெற்றோர், ஆசிரியர்கள், அதிபர் மற்றும் நண்பர்கள் எல்லோருக்கும் மேலாக கடவுளை நினைவில் கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி!

Editor

நாளைய தினம் போக்குவரத்தில் புதிய நடைமுறை

wpengine

நரேந்திர மோடி நாடு திரும்பினார்.

wpengine