பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னாரில் அரசும், மக்களும் சிறக்க விசேட பிரார்த்தினை

மன்னார் மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் புதுவருட பிறப்பை முன்னிட்டு விசேட பூஜைகள் நடைபெறுள்ளன. 

ஆலயத்தின் பிரதமகுரு சிவ ஸ்ரீ கருணானந்த குருக்கள் தலைமையில் இன்று காலை 8.41 மணிக்கு விசேட ஆராதனைகள் நடைபெற்றதை தொடர்ந்து விசேட சித்திரைப் புத்தாண்டு பூஜை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதன்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை நீங்கி நாட்டின் அரசும், மக்களும் சிறக்க விசேட பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டதோடு, பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கப்பட்டு கைவிசேடமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

Related posts

அமைச்சரவை மாற்றத்தில் உயர்கல்வி அமைச்சராக மீண்டும் எஸ்.பி. திஸாநாயக்க!

Editor

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்

wpengine

தமிழ் மொழி பதில் : ஆளும் தரப்பு mpக்கள் இனவாதம் பேசுவதாக அப்புஹாமி குற்றச்சாட்டு.

Maash