பிரதான செய்திகள்

மன்சூரின் காடைத்தனம் இனியும் செல்லாது.

(இப்றாஹிம் மன்சூர்,கிண்ணியா)

நேற்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் சகீல் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூரின் அடியாட்களால் மிகவும் கடுமையான தொனியில் சகீலின் வீடு தேடிச் மிரட்டப்பட்டுள்ளார்.இவ்வாறு அவர் வீடு தேடிச் சென்றவர்களில் அவரது மருமகனும் ஒருவராம்.இது தொடர்பில் சம்மாந்துறை மக்கள் சிலரிடம் தொடர்பை ஏற்படுத்தி வினவிய போது பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் கடந்த வருடமளவில் ஒரு சிறுவனை தாக்கி ஓடி ஒழித்து திருந்த வரலாறுகளை நியாபகம் செய்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் அவர்களே!

உங்கள் காடைத்தனத்திற்கு அஞ்சி ஒழிய நாங்கள் ஒன்றும் கோழைகள் அல்ல.இது காடைத்தனங்களால் சாதிக்கும் காலமுமல்ல.சம்மாந்துறையில் காடைத்தனமான அரசியல் ஒழிக்கப்பட்டு அழகிய நிலையில் இருப்பதாக அறிய முடிகிறது.நீங்கள் அதனை குழப்பி விட வேண்டாம்.நீங்கள் தான் கைத் தொழில் பேட்டையை தடுத்தீர்கள் என்பது உங்களுக்கே நன்றாக தெரியும்.அந்த மக்களின் வாக்களின் மூலம் வந்த பதவியை கொண்டே அவர்களுக்கு கிடைக்கவிருந்த மிகப் பெரும் அபிவிருத்தியை தடுத்து விட்டீர்கள்.அதனை நீங்கள் ஒரு போதும் மறுக்க முடியாது.தேவை ஏற்பட்டால் இதனை ஆதராங்களுடன் வெளிப்படுத்தவும் தயாராகவே உள்ளோம்.அகில இலங்கை மக்கள் கொங்கிரஸின் தலைவருக்கு சம்மாந்துறையில் தான் கைத் தொழில் பேட்டையை அமைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது என்பதை சம்மாந்துறை மக்களும் அறிந்து கொள்ள வேண்டும்.நில விஸ்தீரணம் அதிகமாகவுள்ள சம்மாந்துறையில் இருபது ஏக்கர் காணி இல்லை என்றால் அதனை யாருமே நிறுவலின்றியே அரசியல் விளையாட்டு என்பதை ஏற்றுக்கொள்வார்கள்.

இறக்காமம் சிலை விவகாரத்தில் உங்கள் போக்கு பற்றி நாடே அறியும்.அதன் விமர்சனங்களை தாங்கி கொள்ள முடியாவிட்டால்.உங்கள் பதவியை இராஜினாமா செய்து விட்டு வீட்டில் அமர்ந்து கொள்ளுங்கள்.அதனை எதிர்கொள்ள அடாவடித்தனமான கலாச்சாரத்திற்குள் மக்களை நுழைவிக்க வேண்டாம்.

 

Related posts

ஜூன் மாதம் 3ஆம் திகதி அரச மொழித் தினம்! அமைச்சர் மனோ

wpengine

மன்னாரில் இடம்பெற்ற கூட்டமைப்பின் கூட்டம்! விக்னேஸ்வரன் பகிஷ்கரிப்பு

wpengine

களனி கங்கையின் நீர் மட்டம் குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவிப்பு

wpengine