பிரதான செய்திகள்

மனைவியினை தாக்கிய கணவன்! 30 ஆம் திகதி விளக்கமறியல்

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் மனைவியொருவரை தாக்கி காயப்படுத்திய கணவரை எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் முன்னலையில் நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நான்கு பிள்ளைகளின் தந்தையான ஹைரிய்யா நகர், மூதூர் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் மனைவியோடு ஏற்பட்ட குடும்ப பிரச்சினைகள் காரணமாக மனைவியைத் தாக்கி காயமேற்படுத்தியதாக மூதூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டிற்கு அமைய சந்தேகநபரை கைது செய்த பொலிஸார் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சிங்கள நாடு, மேலும் இது ஒரு பௌத்த நாடு, அதை யாரும் மாற்ற முடியாது

wpengine

மலேசியா பொருளாதார மாநாட்டுக்கு ஹிஸ்புல்லாஹ்வுக்கு விசேட அழைப்பு

wpengine

‘செல்பி’ பிரியர்களே! உஷாராக இருங்கள்.

wpengine