உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

மனமுடைந்து போன மனைவி! தீக்குளித்து தற்கொலை

சென்னை மாநகராட்சியில் புழல், காவாங்கரை, பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் உள்ள இலங்கைப் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 4ஆம் திகதி மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்ட இவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மரணமடைந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் 28 வயதாகிய சுசாந்தினி என்ற இலங்கைப்பெண்ணே உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் புழல் சிறைக்காவலராக இருந்த இசை செல்வன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

 

இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். தற்போது, வேலூர் சிறையில் இசை செல்வன் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இசை செல்வனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக மனைவியான சுசாந்தினியையும், 3 குழந்தைகளையும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இதனால், மனமுடைந்து போன குறித்த இலங்கைப் பெண்ணான சுசாந்தினி மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டுள்ளார்.

இது குறித்து புழல் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

அரபு வசந்தமும், அதனை அமெரிக்கா கையாண்டமையும், ஐ.எஸ் பயங்கரவாதமும்.

wpengine

கடற்றொழில் அமைச்சரை சந்தித்த வாழைச்சேனை மீனவர்கள்

wpengine

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் உயர்பாதுகாப்பு வலயங்களாக பிரகடனம்

wpengine