பிரதான செய்திகள்விளையாட்டு

மதம் மாறி இஸ்லாமிய பெண்னை திருமணம் முடித்தமைக்கு வெய்ன் தில்லான் பார்னெல் காரணம்!

தென்னாபிக்க அணியில் 2010ம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய வெய்ன் தில்லான் பார்னெல் Wayne Dillon Parnell 1989ம் ஆண்டு ஜூலை மாதம் 30ம் திகதி தென்னாபிரிக்க நாட்டின் போர்ட் எலிசபத் நகரில் பிறந்துள்ளார்.

இடது கை வேகப்பந்து வீச்சாளரான பார்னெல் 2013ம் ஆண்டு தனது அறிமுக ஒரு நாள் சர்வதேச போட்டியில் இந்தியாவிற்கு எதிராக விளையாடியுள்ளதோடு 20க்கு இருபது சர்வதேச போட்டியில் 2009ம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு எதிராகா முதன்முதலில் களமிறங்கியுள்ளமை குறிப்பிடதக்க விடயமாக இருக்கின்ற அதே நேரம் தில்லி டேர்டெவில்ஸ் , புனே வாரியர்ஸ் மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் அணிகளையும் பிரதி நிதித்துவப்படுத்தி விளையாடியுள்ளமையும் முக்கிய விடயமாகும்.

பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் கடுமையான கோப சுபாவம் காணப்பட்டாலும் பார்னெல் ஒரு வித்தியாசமான வீரராக தென்னாபிரிக்க அணியில் இடம் பெற்றிருந்தார்.

அதனாலேயே தான் விளையாட்டில் பொறுமைக்கு உதாரணமாக விளங்கு தனதணியில் உள்ள சக வீரரான ஹாஸிம் அம்லாவுடன் அதிகமான நேரத்தை செலவிடும் அணியில் உள்ள ஒரு வேகப்பந்து வீச்சாளராக பார்னெல் அணியில் காணப்பட்டார்.

அதனால் ஹாஸிம் அம்லாவின் வாழ்க்கையில் காணப்பட்ட அர்த்தத்தின் பால் கவரப்பட்ட பார்னெல் 2011ம் ஆண்டு ஜூலை 30ம் திகதி தனது அணி வீரர்களான ஹாஸிம் அம்லா, இம்ரான் தாஹிர் மற்றும் அணியின் முகாமையாளர் முகம்மட் முஸாஜீ ஆகியோர் அடங்களாக உத்தியோக பூர்வமாக தான் இஸ்லாமிய மார்கத்தினை தழுவியதாக அறிவித்திருந்தார். (அல்லாஹு அக்பர்).

2016ம் ஆண்டு ஆயிஷா பாக்கர் எனும் பெண்மணியினை திருமண நிகாஹ் செய்து கொண்ட பார்னெல் ,உத்தியோக பூர்வமாக கடந்த மே மாதம் 22ம் திகதி தனது பெயரினை வலீத் Waleeth என மாற்றிக்கொண்டு இல்லர வாழ்கையில் இணைந்து கொண்டார்.

தனது மதமாற்றம் பற்றி பார்னெல் கூறுகையில்

தனது சக அணி வீரரான ஹாசிம் அம்லாவின் இஸ்லாமிய வாழ்க்கையும் அவருடைய பொறுமை, நட்பு, உணவு உட்கொள்ளும் முறை, இறை பக்தி, ,பழகவழக்கம், பிரயாணத்தின் பொழுது நடந்து கொள்ளும் முறை, போன்ற விடயங்களோடு இன்னும் அன்றாடம் மனிதன் தனது தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மேற்கொள்ளும் விடயங்களே தனை இஸ்லாமிய மார்க்கத்தில் இணைத்து கொண்டு இஸ்லாமிய பெண் மணியினை திருமணம் முடிக்க என்னை தூண்டியது என தெரிவித்தார்.Untitled

Related posts

நஷீர் அஹமட் தடை நீக்கம்

wpengine

மன்னார் கடற்பரப்பில் ஒரே வகையான மீன்கள்

wpengine

ஒன்லைன் மூலம் பணம் செலுத்தும் முறைக்கு மாறும் உள்ளூராட்சி மன்றங்கள்!

Editor