பிரதான செய்திகள்

மண்முனை கட்டைக்காடு பிரதான வீதி புனரமைப்பு ஆரம்பித்து வைத்த -அமைச்சர் டெனிஸ்வரன்

வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் 2016 ஆம் ஆண்டுக்கான மாகாண அபிவிருத்தி நன்கொடையின் (PSDG) கீழ் 09 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாணம் மருதங்கேணி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட , மண்முனை கட்டைக்காடு பிரதான வீதியின் இரண்டு கல்வெட்டுக்கள் அமைக்கும் வேலைத்திட்டத்தை வெத்திலைக்கேணியில் 28-04-2016 வியாழன் காலை 10.30 மணியளவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன்.

நிகழ்விற்கு அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திரு.டி.சிவராஜலிங்கம், மருதங்கேணி பிரதேச செயலாளர் திரு.கே.கனகேஸ்வரன், வீதி அபிவிருத்தித் திணைக்கள யாழ் மாவட்ட பிரதம பொறியியலாளர் திரு.வி.முரளீதரன், யாழ் மாவட்ட நிறைவேற்றுப் பொறியியலாளர் திருமதி.அபிராமி வித்தியாபரன், மற்றும் கிராம சேவகர், அக்கிராமத்து அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.f14da2a1-d7b7-4f04-ab3a-a7d3cfa6666cbeedf5fc-5840-4d26-8eb8-579fedab466d663d5a48-bb6a-4c7f-8325-e3a235018f56

Related posts

அத்துமீறும் வடமாகாண அரசியல் இனவாதிகள்: சாடுகிறார் விமல்

wpengine

ரணில் திருடன் தாக்குதல்! பாராளுமன்றம் ஒத்திவைப்பு

wpengine

கழுதைக்கு கரட் காட்டுவது போல! அட்டாளைச்சேனைக்கு ஹக்கீமின் தேசிய பட்டியல்

wpengine