பிரதான செய்திகள்

மண்ணெண்ணெய்யின் நாளாந்த கேள்வி 100 மெற்றிக் தொன்னாக அதிகரித்துள்ளது.

மண்ணெண்ணெய்யின் நாளாந்த கேள்வி 100 மெற்றிக் தொன்னாக அதிகரித்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதனை தெரிவித்துள்ளது.

இதுவரையான காலத்தில் மண்ணெண்ணெய்யின் நாளாந்த கேள்வி 500 மெற்றிக் தொன்னாக இருந்து வந்தது.

தற்போது அது 600 மெற்றிக்தொன்னாக அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக சந்தையில் பற்றாக்குறையில்லாமல் விநியோகத்தை பராமரிக்க வேண்டியுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை மீனவ சமூகத்துக்கான மண்ணெண்ணெய் விநியோகத்தையும் உரிய முறையில் மேற்கொண்டு வருவதாக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்த கேள்வி அதிகரிப்புக்கு எரிவாயு கொள்கலன்களின் பற்றாக்குறையும் காரணம் என்று கருதப்படுகிறது.

Related posts

விடைத்தாள் திருத்தும் பணிகளை முடக்குவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!-ஜனாதிபதி-

Editor

மின்சார பஸ்களை இறக்குமதி செய்ய போக்குவரத்து அமைச்சு அனுமதி!

Editor

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நடாளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் (விடியோ)

wpengine