பிரதான செய்திகள்

மணப்பெண்ணாக மணமேடையில் பார்த்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத் ஆகியோர் நீண்ட நாட்களின் பின்னர் நேற்று முன்தினம் சந்தித்து கொண்டுள்ளனர்.

அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இளைய மகளின் திருமணம் பல உள்ளூர் மற்றும் வெளியூர் அரசியல்வாதிகள் பங்களிப்புடன் நேற்று முன்தினம் வெகு பிரம்மாண்டமாக இடம்பெற்றது.
இதன்போது பல்வேறு அரசியல் சார்ந்த சந்திப்புக்களும் இடம்பெற்றன.

இதன்போது, அமைச்சர் ரவூப் ஹக்கீமின் நெருங்கிய நண்பரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் அவர்களும் குறித்த திருமணத்தில் கலந்து கொண்டிருந்தார்.

அரசியல் ரீதியான பல மனஸ்தாபங்களுக்கு மத்தியில் வெகு நீண்ட நாட்களின் பின்னர் அமைச்சர் ரவூப் ஹக்கீமும், பசீர் சேகுதாவூத் அவர்களும் இந்த திருமண நிகழ்வில் சந்தித்து கொண்டுள்ளனர்.

அதேசமயம், “அமைச்சர் ஹக்கீமின் மகள் நான் பார்க்க வளர்ந்த பிள்ளை, வெகு நீண்ட நாட்களின் பின்னர் அவரை திருமணத்தில் பார்க்கக் கிடைத்தது எனக்கு பெரும் மகிழ்ச்சி, மணப்பெண்ணாக மணமேடையில் பார்த்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது. அன்பொழுக நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அவர் என்னைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை”
என ஹக்கீமின் மகள் குறித்து பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

Related posts

களுத்துறை கடற்கரையில் திடீரென கரையொதிங்கிய 6 டொல்பின்கள்.

Maash

வடக்கு,கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு! றிஷாட்,ஹிஸ்புல்லாஹ் எதிர்ப்பு

wpengine

ஹக்கீமின் “கொட்டை”பாக்கு கதை! பாக்கு வெட்டியுடன் முஸ்லிம்கள்.

wpengine