பிரதான செய்திகள்

மட்டு மாவட்டத்தில் மீள்குடியேற்றத்தில் முஸ்லிம்களுக்கு பாரபட்சம் ஷிப்லி பாறூக் ஆவேசம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த காலங்களின்போது இடம்பெயர்ந்து ஒவ்வொருஇடங்களாக வாழ்ந்துவந்த மக்கள் அவர்களுடைய சொந்த இடங்களுக்கு மீண்டும்மீளக்குடியேறுவதற்கு முற்படும்போது அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசாங்கம் செய்து கொடுக்கின்ற அதே வேளையில் முஸ்லிம் கிராமங்கள் அதில் உள்வாங்கப்படாமல் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டுக் கொண்டுவருகின்றது.

குறிப்பாக மண்முனைப்பற்றில் அமைந்துள்ள மண்முனை, ஒல்லிக்குளம், கீச்சம்பள்ளம் மற்றும் மண்முனை மேற்கு, ஏறாவூர்பற்று, கோரளைப்பற்று, கிரான் போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள முஸ்லிம் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டு, அங்குள்ள மக்கள் மீள்குடியேற நினைக்கின்றபோது அவர்களுக்கு தேவையான அத்தியாவசியமான மலசல கூட வசதி, நீர் வசதி அதே போன்று அவர்களுக்குரிய வீடு வசதிகள் அரசாங்கத்தால் செய்துகொடுக்கப்படுகின்ர வேளையில் தொடர்ச்சியாக அனைத்து திட்டங்களிலும் முஸ்லிம்கள் உள்வாங்கப்படாமல் புறக்கணிக்கப்படுகின்ற விடயம் மிகவும் கவலைக்குரியதாகும்.unnamed (3)
இந்த விடயத்தினை 2016.08.22ஆந்திகதி (திங்கட்கிழமை) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் மிகத் தெளிவாகவும் ஆதார பூர்வமாகவும் கூட்டத்தில் பங்கேற்ற இணைத்தலைவர்கள், மாவட்ட அரசாங்க அதிபர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு தெளிவுபடுத்தினார். இதுசம்பந்தமான நடவடிக்கைகளை எடுப்பதாக எங்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் குறிப்பாக இந்திய வீட்டுத்திட்டம் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினூடாக வழங்கப்படுகின்ற வீட்டுத்திட்டம் அதே போன்று மலசல கூடங்கள் கூட கொடுக்கப்படாமல் அந்த மக்கள் அங்கே குடியேறவிடாமல் தடுக்கின்ற ஒரு செயற்பாடு மிகத் திட்டமிட்ட அடிப்படையில் நடந்து கொண்டிருக்கின்றது.unnamed (4)
இது யுத்தம் முடிவடைந்து 7 வருடங்கள் கடந்தும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக புறக்கப்பட்டுவருக்கின்ற விடயத்தினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கிழக்கு மாகாண சபை உறுப்பனர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.unnamed (2)

Related posts

தமிழ் கட்சிகள், பொது அமைப்புக்களின் முக்கிய கலந்துரையாடல் நாளை வவுனியாவில்!

Editor

ரஷ்யா மீதான பொருளாதார தடை! டொனால்ட் டிரம்ப் ஒப்புதல்

wpengine

ஜனாதிபதியின் அறிவுறுத்தலில் வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து பேசிய அமைச்சர் றிஷாட்

wpengine