பிரதான செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் தீக்கிரையாக்கப்படும் அம்பிட்டிய சுமணரத்ன தேரர்

மட்டக்களப்பு அரசாங்க அதிபரை வெளியேற்றி இந்த பிரச்சினையை மூடி மறைக்க முற்படுவார்களாயின் அன்று இந்த மாவட்டச் செயலகம் தீக்கிரையாக்கப்படும் என மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மட்டக்களப்பு மாவட்ட செயலாளரிடம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வாழைச்சேனை மீராவோடை சக்தி வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தின் காணி மற்றும் மக்களின் குடியிருப்பு காணிகளை சகோதர இனத்தவர்களால் அத்துமீறி அபகரித்த விடயம் தொடர்பாக அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் மாணவர்கள், நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந் நிலையில் மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் சகிதம் பாதிக்கப்பட்ட மக்கள் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் சாள்ஸை சந்தித்தனர்.

இதன் போது கருத்து வெளியிட்ட சுமணரத்ன தேரர்,

பாடசாலையின் மைதானத்தின் நடுவிலே அமைக்கப்பட்டுள்ள கொட்டகை கழற்றப்பட வேண்டும். இதனை நாங்கள் பலத்தகாரமாக கழற்ற முடியாது. அரசாங்க அதிபரே நீங்கள் இதனை உங்கள் கண்ணால் காண்பது நல்லது.

எனக்கு தெரிந்த காலம் தொடக்கம் இந்த மக்கள் மட்டக்களப்பு நகருக்கு வந்து இது தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு நியாயம் கிடைக்கவில்லை.

ஆனால் அவர்களுக்கு தொடர்ந்து அநீதி ஏற்பட்டிருக்கின்றது. குட்டக்கட்ட குனிந்து இயலாத கட்டத்திலே என்னிடம் வந்து இதனை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் நான் இன, மதவாதியோ அல்ல. ஆனால் இந்த பாடசாலை மைதானத்தில் நடுவில் அத்துமீறி அமைக்கப்பட்ட கொட்டகைக்கு முற்றிலும் நான் எதிர்ப்பு தெரிவிக்கிறேன்.

அது சிங்களவரோ, தமிழரோ, முஸ்லிமோ யாராக இருந்தாலும் அது தவறு. எனவே இதனை அரசாங்க அதிபர் உடனடியாக முடிவுக்கு கொண்டுவர முடியும்.

எனவே 28ம் திகதி வரும்போது அந்த மைதானத்தின் நடுவே இருந்த கொட்டகை அகற்றப்பட வேண்டும். இல்லாவிடில் 29ம் திகதி நான் அதனை களற்றுவேன். இந்த நாட்டின் நீதிமன்றத்தின் சட்டத்திற்கு பொறுப்புடன் கூறுகின்றேன்.

வீட்டை உடைத்த அத்துமீறி சென்றது என கைது செய்ய வேண்டாம். இதனை செய்வது ஒரு இனத்திற்கான அநீதியாகும். என்னால் களற்ற முடியும். இது உண்மை.

எனவே இனவாத முரண்பாடுகள் சண்டைகள் ஏற்படுவதற்கு முன்னர் நீங்கள் அப்பாவி மக்களுக்கு உத்தியோகத்தர் ரீதியில் செயற்பட வேண்டும். நீங்கள் அநியாயங்கள் வரும்போது அதற்கு நடவடிக்கைகள் எடுக்கின்றீர்கள். ஆனால் இந்தப் பிரச்சினைக்கு இறுதி தீர்மானம் எடுக்கப்படுவதில்லை.

அரசாங்க அதிபர் நீங்கள் கட்டளை பிறப்பீக்கின்றீர்கள். ஆனால் வாழைச்சேனை பிரதேச செயலாளரோ அவருக்கு தேவையான முடிவை அவர் எடுப்பார்.

இந்த நிலையில் நீங்கள் நியாயம் வழங்கப்படும் போது உங்களை வெளியேற்ற இருக்கின்றார்கள் என பயப்படவேண்டாம். உங்கள் சேவையை செய்யுங்கள்.

அதேவேளை அரசாங்க அதிபரை வெளியேற்றி இந்த பிரச்சினையை மூடி மறைக்க முற்படுவார்களாயின் அன்று இந்த மாவட்டச் செயலகம் தீக்கிரையாக்கப்படும் என்றார்.

அவர் இது தொடர்பில் பேசியதன் பின்னர் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், இப்பிரச்சினை தொடர்பாக பொறுமையாக இருக்குமாறும் அரசாங்க அதிபருக்கு காணி அதிகாரம் அதனை தலையிடக்கூட அதிகாரம் இல்லை. காணிகளை அத்தமீறி இருப்போருக்கு எதிராக பிரதேச செயலாளர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

இருந்த போதும் அதற்குரிய அதிகாரிகளை கூப்பிட்டு பரிசீலித்து மாகாணசபை, மாகாண காணி அதிகாரி இதன் சட்டத்தரணிகள் இருக்கின்றனர்.

எனவே சட்டரீதியாக தீர்க்கப்படவேண்டும். இதற்கு எதிர்வரும் 24ம் திகதி திங்கட்கிழமை உரிய அதிகாரிகளை மாவட்ட செயலகத்திற்கு அழைத்து அதற்கான தீர்வைப் பெற்ற தருவதாக உறுதியளித்தார்.

இதேவேளை, மட்டக்களப்பு வாழைச்சேனை மீராவோடை சக்தி வித்தியாலயத்தின் விளையாட்டு மைதான காணி மற்றும் மக்களின் குடியிருப்பு காணிகளை சகோதர இனத்தவர்களால் அத்துமீறி அபகரித்த விடயம் தொடர்பாக எதிர்வரும் 24ம் திகதி திங்கட்கிழமை அப் பிரதேச செயலாளர் மற்றும் அதிகாரிகளை அழைத்து அதற்கான தீர்வை பெற்றுத்தருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் ஆகியோரிடம் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

Related posts

மு.காவின் உயர் பீட ஊஞ்சல் விளையாட்டு

wpengine

தாஜூடின் கொலை! அனுர சேனாநாயக்க, சுமித் பெரேரா பிணை முறுப்பு

wpengine

பால் மாவின் விலையை மேலும் குறைக்க தீர்மானம்!

Editor