பிரதான செய்திகள்

மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் முச்சக்கரவண்டி விபத்து (படங்கள்)

(எம்.ரி.எம்.யூனுஸ்)

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதி மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்ப கல்லூரிக்கு முன்பாக முச்சக்கரவண்டி இன்று காலை (12.06.2016) விபத்துக்குள்ளானது.

மட்டக்களப்பு போதனா வைத்தாயசாலைக்கு உறவினரை பார்வையிடச் சென்று காத்தான்குடிக்கு திரும்பிக்கொண்டிருந்த போதே வேகக்கட்டுப்பாட்டை இழந்து  நித்திரை காரணமாக மின்கம்பத்துடன் மோதுண்டு விபத்து இடம்பெற்றதாக விபத்துக்குள்ளானோர் தெரிவித்தனர்.

சிறு காயங்களுக்குள்ளான நிலையில் முச்சக்ரவண்டியில் பயணம் செய்தவர்கள் மூவரும் வீடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

1c34f1dc-5169-4fb3-ac4a-8ad7ccac55977d4c4f1e-8ea9-4974-8fd1-c1832fc63748

Related posts

இலங்கையர்கள் இருவருக்கு இந்தியாவில் கொரோனா!

Editor

100 மில்லியன் ரூபா இழப்பீட்டை செலுத்திய மைத்திரி!

Editor

அமைச்சர் ஹக்கீமின் கட்டார் கனிமூன்

wpengine