பிரதான செய்திகள்

மக்கள் விடுதலை முன்னணியின் மீட்புப் படையணியான செந்தாரகைப் படையணி மீண்டும்

நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஏற்பட்டுள்ள தேசிய அனர்த்த நிலையை முன்னிட்டு நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் செந்தாரகைப் படையணியினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் விடுதலை முன்னணியின் மீட்புப் படையணியான செந்தாரகைப் படையணி தற்போது தென்னிலங்கையின் பல பிரதேசங்களில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அந்த கட்சி அறிவித்துள்ளது.

கடந்த 2004ஆம் ஆண்டு இலங்கையில் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உயிரிப்பை ஏற்படுத்திய சுனாமிப் பேரிடரின் போது செந்தாரகைப் படையணி ஜே.வி.பியினரால் முதன்முதலாக களமிறக்கப்பட்டிருந்தது.

அதன் போது அரசாங்க அதிகாரிகள் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் செயற்பாடுகளை விட அதிகளவான நிவாரண மற்றும் மீட்புப் பணிகளை செந்தாரகைப் படையணியினர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

“முரண்பாட்டு சமன்பாடு” கவிதை தொகுப்பு வெளியீடு

wpengine

நெற் பயிர்ச்செய்கை செய்த அனைத்து விவசாயிகளுக்கும் நிதி நிவாரணம்!

Editor

கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் வடுக்கள் ஆறவில்லை

wpengine