பிரதான செய்திகள்

மக்களுக்காக பணியில்! அரச ஊழியர்களினால் பாரிய தாமதம்

மக்களுக்காக பணி செய்யும் போது அரச ஊழியர்களினால் பாரிய தாமதம் ஏற்படுத்தப்படுவதாக, பொது நிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

அவ்வாறு பணியை தாமதமாக செய்பவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளளார்.

அதற்கான சட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருகின்றது.

தொழிற்சங்கங்கள் பொது மக்களுக்கு சேவை செய்வதற்காக உள்ளதே தவிர பணியை நிறுத்துவதற்கு அல்ல என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இவை அனைத்து மக்களுக்காக செய்யப்படும் பணி அதனை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்விற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இரு சிறுநீரகங்களும் பாதிப்பு! வவுனியா சிறுவனுக்கு உதவி செய்யுங்கள்

wpengine

இணையத்தளங்கள் வாயிலாக கருத்து பொதுபல சேனா முறைப்பாடு

wpengine

அச்சிடப்படும் பணமும், நாட்டின் பொருளாதாரமும்!

wpengine