பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மகளிர் தினம் நிகழ்வில் கௌரவிக்கப்பட்ட அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டிமெல்

“நாடும் தேசமும் உலகமும் அவளே” எனும் தொனிப்பொருளில் சாதனை படைத்த பெண்களை கெளரவிக்கும் மகளிர் தின நிகழ்வும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஸ்ரான்லி டிமெல் அவர்களை வரவேற்கும் நிகழ்வும் மன்னார் நகர் பிரதேச செயலாளர் ம.பிரதீப் தலைமையில் நேற்று மதியம் 2.30 மணியளவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது

பிரதேச ரீதியில் சிறந்த பெண் முயற்சியாளர்களை கெளரவிக்கும் முகமாகவும் மன்னார் மாவட்டத்தின் புதிய முதல் பெண் அரசாங்க அதிபரை வரவேற்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த மகளிர் தினத்தில் சிறந்த வீராங்கனை சிறந்த பெண் முயற்சியாளர்கள் பிரதேச ரீதியாக தெரிவு செயப்பட்டு அவர்களுக்கான விருதுகள் மற்றும் பரிசில்களும் வழங்கப்பட்டது

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஸ்ரான்லி டிமேல் அவர்களும் உதவி பிரதேச செயலாளர் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் பிரதேச செயலக கணக்காளர் நிர்வாக உத்தியோகஸ்தர் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பெண் முயற்சியாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

Related posts

சசிகலாவை கிண்டலடிக்கும் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க!

wpengine

அரசாங்கம் கண்ணை கட்டி, கணக்கு வித்தை காட்டி சிங்கள மக்களிடம் மறைக்க முயல்கிறது

wpengine

சிறுவர் துஷ்பிரயோகங்கள் உடனடி தொடர்பு WhatsApp உட்பட

wpengine