பிரதான செய்திகள்

பௌத்த விகாரையில் பாலியல் துஷ்பிரயோகம்! எழுத்தாளர் கைது

பௌத்த விகாரைகளில் இடம்பெறும் பாலியல் குற்றச் செயல்கள் தொடர்பில் சிறுகதை எழுதிய எழுத்தாளர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கவிஞர் மற்றும் சிறுகதை எழுத்தாளரான சாக்திக சாத்குமார என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொல்கஹாவல நீதிமன்றினால் குறித்த எழுத்தாளரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொல்கஹாவெல பிரதேசத்தினைச் சேர்ந்த பௌத்த பிக்குகளினால் செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து குறித்த எழுத்தாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொல்கஹாவெல பிரதேச செயலகத்திலும் குறித்த எழுத்தாளர் தொடர்பிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை பௌத்த விஹாரைகளில் இடம்பெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள் பற்றிய விடயங்கள் சிறுகதையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

றிஸ்வி ஜவ­ஹர்­­ஷாவின் முயற்­சியில் குருனாகலில் அபிவிருத்தி வேலைத்திட்டம்

wpengine

அங்கஜனுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்

wpengine

எல்பிட்டிய தேர்தலில் மக்கள் வழங்கிய முடிவு ஜனாதிபதி தேர்தலிலும் கிடைக்கும்

wpengine