பிரதான செய்திகள்

பௌத்த துறவிகளாக துறவறம் பூண்ட தமிழ்ச் சிறார்கள்- (விடியோ)

இலங்கையின் வடக்கே, போரினால் பாதிக்கப்பட்ட வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் சிறார்கள் இருவர், புத்தளம் மாவட்டம் கற்பிட்டியில் உள்ள பௌத்த விகாரை ஒன்றில் பௌத்த பிக்குகளாக துறவறம் பூண்டுள்ளனர்.

கண்டக்குழி சமுத்ராசன்ன விகாரையின் தலைமை பிக்குவான பெந்திவெவ தியசேன தேரரின் வழிநடத்தலில் இந்தச் சிறார்கள், ஓராண்டுக்கு முன்னர் பௌத்த பிக்குகளாக மாறினார்கள்.

துறவிகளாகி ஓராண்டுக்குள் சிங்கள மொழியில் பௌத்த வழிபாடுகளை நடத்துமளவுக்கு பயிற்சி பெற்றுள்ள இந்தச் சிறார்களை, எதிர்காலத்தில் தமிழ் மொழியில் பௌத்த போதனைகளை வழங்குவதற்காக தயார்படுத்தவுள்ளதாக பெந்திவெவ தியசேன தேரர் அங்கு சென்ற பிபிசி சிங்கள சேவையின் செய்தியாளரிடம் கூறினார்.

Related posts

அரசுக்கு எதிராக நாடு முழுவதும் கூட்டம் நடாத்த விமல் கூட்டணி மந்திர ஆலோசனை

wpengine

புதிதாக அமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடத்தொகுதியினை திறந்து வைத்த அமைச்சர் றிஷாட், டெனீஸ்வரன்

wpengine

முஸ்லிம் மதத்தை இழிவு செய்த அர்ச்சுனாக்கு முழு பைத்தியம் என்று சிந்திக்கத்தோணும் அளவுக்கு அவருடைய பேச்சு அமைந்துள்ளது,வீடியோ இணைப்பு உள்ளே.

Maash