தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

போலி பேஸ்புக்! சில்வா முறைப்பாடு

தனது பெயரை பயன்படுத்தி போலியான முகப்புத்தக கணக்கொன்று பராமரிக்கப்படுவதாக தெரிவித்து இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா கணினி அவசர நடவடிக்கை அமைப்பில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முகப்புத்தக கணக்கில் தன்னை பற்றி தவறான செய்திகள் வௌியிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனக்கு முகப்புத்தக கணக்கோ அல்லது வேறு எந்த சமூக ஊடக கணக்குகளோ இல்லை என எமது செய்திச் சேவைக்கு தெரிவித்த அரவிந்த டீ சில்வா , இவ்வாறு போலியான சமூக ஊடக கணக்குகளை பராமரிப்பவர்களுக்கு எதிராக , இதற்கு முகங்கொடுத்த நபர்கள் முறைப்பாடு செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.

விசேடமாக இவ்வாறான விடயங்கள் காரணமாக , இளைஞர் யுவதிகள் தற்கொலை செய்துக்கொள்ளும் சம்பவங்கள் பதிவாகின்றமையால் இவ்வாறு முறைப்பாடு செய்வது மிக முக்கியமானதாகும் என அவர் வலியுறுத்தினார்.

Related posts

சிகரெட் வெடித்து ஒருவர் உடல் கருகி பலி

wpengine

சிலாவத்துறை போதனாசிரியர் காரியாலயம் மூடுவிழா! உரிய அதிகாரி நடவடிக்கை எடுப்பாரா?

wpengine

வில்பத்து பிரச்சினை! றிஷாட்டை பலவீனப்படுத்த டயஸ்போரா, பொதுபல சேனா. மு.கா முயற்சி

wpengine