பிரதான செய்திகள்

போலி ATM அட்டைகள் மூலம் பண மோசடியில் ஈடபட்ட ஒருவர் கைது!

போலி ATM அட்டைகளை பயன்படுத்தி பணத்தை திருடிய சந்தேகநபர் ஒருவர் 15 போலி ATM அட்டைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிலியந்தலை, கொட்டாவ, தெஹிவளை, மிரிஹான மற்றும் மஹரகம ஆகிய பொலிஸ் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட 50 முறைப்பாடுகள் தொடர்பில் நுகேகொட பிரதேச குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர்.

ATM இயந்திரங்களில் பணம் எடுக்க வரும் சிலருக்கு உதவி செய்வதாகக் கூறி இரகசிய இலக்கத்தை சந்தேகநபர் பெற்றுக் கொண்டதாகவும், அச்சமயம் இயந்திரத்தில் இருந்த பணத்தை பெற்றுக்கொண்டு போலி ATM அட்டையை அவர்களிடம் கொடுத்து அனுப்புவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதன் பின்னர் குறித்த சந்தேகநபர் உண்மையான ATM அட்டையைப் பயன்படுத்தி மோசடியான முறையில் பணத்தை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் இன்று (11) நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிரிஹான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

4 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற உயர் அதிகரிகள் இருவர் கைது!

Editor

தமிழர்களால் தாயகத்தில் நடாத்தவிருக்கும் எழுகதமிழ் நிகழ்வு

wpengine

மன்னார் வைத்தியசாலையில் விபத்துக்கான ஒத்திகை

wpengine