பிரதான செய்திகள்

போர்ட் சிட்டியில் முதலீடு செய்வதற்காக கட்டார், ஓமான், இந்தியா ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை!

போர்ட் சிட்டி கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீட்டுகாக, கட்டார் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளின் முதலீடுகளை பெற்றுக்கொள்வதற்காக மதிப்பீடுகளை மேற்கொள்வதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பிரதிநிதி என்ற ரீதியில், சமீபத்தில் ஓமான் மற்றும் கட்டாருக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது இந்த விடயம் தொடர்பாக இரு நாட்டு நிர்வாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு விஜயம் செய்து முதலீடு தொடர்பாக கண்டறியுமாறு இந்த குழுவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்தியாவுக்கு செல்லவிருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மன்னார்-தாழ்வுபாடு 396 கிலோ கிராம் மஞ்சள் மீட்பு

wpengine

32,380 கஞ்சா செடிகளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Maash

நன்றிகெட்ட நாயகனின் நாடகம்! அஷ்ரப் நினைவு நாள் சோகம்

wpengine