உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

போர் நிறுத்தம் காலாவதியாகிவிட்டதால், அனைத்து மனிதாபிமான உதவிகளும் காசாவிற்குள் தடுப்பு .


ஹமாஸுடனான போர் நிறுத்தத்தின் முதல் கட்டம் காலாவதியாகிவிட்டதால், காசாவிற்குள் அனைத்து மனிதாபிமான உதவிகளும் நுழைவதை இஸ்ரேலிய அரசாங்கம் தடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காஃப்பின் முன்மொழிவின் கீழ் தற்காலிக போர் நிறுத்த நீட்டிப்பை ஹமாஸ் இதுவரை ஏற்க மறுத்துவிட்டதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் இந்த நடவடிக்கையை “மலிவான அச்சுறுத்தல்” என்றும், போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உள்ள சதி எனவும் விமர்சித்துள்ளார்.

இஸ்ரேல் மீண்டும் உதவி வழங்க வேண்டும் என்றும்  மத்தியஸ்தர்களை வலியுறுத்தினார்.

பாலஸ்தீன குழு, பணயக்கைதிகள் மற்றும் பாலஸ்தீன கைதிகளை விடுவித்தல் மற்றும் காசாவிலிருந்து இஸ்ரேலியப் படைகளை திரும்பப் பெறுதல் ஆகியவற்றுடன், ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டம் முதலில் பேச்சுவார்த்தை நடத்தியபடி தொடர வேண்டும் என்று விரும்புகிறது.

Related posts

கத்தாரில் 20 ஆண்டுகால போர் முடிவுக்கு வருகிறது.

wpengine

பிரான்ஸில் வௌ்ளம் பெருமளவில் மக்கள் இடம்பெயர்வு

wpengine

முஸ்லிம் மதகுருவை நாடுகடத்தும் பிரான்ஸ் அரசு

wpengine