பிரதான செய்திகள்

போனஸ் ஊடாக பாராளுமன்றம் செல்லும் ரணில்- அர்ஜூன ரணதுங்க

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த ஒரு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அந்த கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.


ஐக்கிய தேசியக் கட்சியின் 74 வது ஆண்டு நிறைவு வைபவத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.


அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாம் அணி ஒன்றை தெரிவு செய்யும் போது, சிறந்த வீரர்தானே போட்டியில் விளையாடுவார். பெயர்களின் அடிப்படையில் போட்டிகளில் விளையாட மாட்டோம்.


பரம்பரையை சேர்ந்தவர் விளையாட மாட்டார். நாம் எப்போது சிறந்த அணியை உருவாக்கவே முயற்சிப்போம். இந்த சந்தர்ப்பத்தில் அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்படுவதால், ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம்.


அதேவேளை நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்கப்பட உள்ள 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் காரணமாக ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


ஐக்கிய தேசியக் கட்சியில் மாத்திரமல்ல, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 பேரில் அரசியலமைப்புச் சட்டம், திருத்தச் சட்டம் குறித்து நன்கு அறிந்த திறமையான நபர் ரணில் விக்ரமசிங்க எனக் கூறப்படுகிறது.


இப்படியான சந்தர்ப்பத்தில் அரசியலமைப்புச் சட்டம் சம்பந்தமாக நன்கு அறிந்த நபர் நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எனினும் இது சம்பந்தமாக ரணில் விக்ரமசிங்க தனது விருப்பத்தை இன்னும் தெரிவிக்கவில்லை என தகவல்கள் கூறுகின்றன.

Related posts

அடுத்து வரும் 5 நாட்கள் மிகவும் ஆபத்தான காலப்பகுதி சவேந்திர சில்வா

wpengine

அதிகாரப்பகிர்வு அனைத்து இனங்களுக்கும் நன்மை பயக்கவேண்டும் – றிசாத் எடுத்துரைப்பு

wpengine

ட்ரோன் கமரா மூலம் மக்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும் நடவடிக்கை வவுனியாவில்

wpengine