செய்திகள்பிரதான செய்திகள்

போதைப்பொருள் வலையமைப்புகளை அடையாளம் காண்பதற்கான விசேட நடவடிக்கை..!

சிறிய, நடுத்தர மற்றும் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர். 

இதன்படி, நேற்று (13) முதல் அனைத்து பிராந்திய காவல் பிரிவுகளையும் உள்ளடக்கி போதைப்பொருள் வலையமைப்புகளை அடையாளம் காண்பதற்கான விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

இந்த நடவடிக்கையில் தேவைக்கேற்ப விசேட அதிரடிப்படையினர், இராணுவம் மற்றும் மோப்ப நாய் பிரிவின் உதவியையும் பெறுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. 

சட்டவிரோத போதைப்பொருட்களைக் கடத்துதல், தம்வசம் வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கான தடுப்புக்காவல் உத்தரவுகளையும் பெறுவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

மொரட்டுவை எகொட பகுதியில் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற இரு மீனவர்கள் மாயம்.

Maash

அம்பாறையில் குழப்பத்தை ஏற்படுத்திய “சிங்க லே“! அமைப்பு

wpengine

உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்கான வட்டியில்லா கடனை மீள வழங்குமாறு சஜித் கோாிக்கை!

Editor