பிரதான செய்திகள்

பொருளாதாரப் பிரச்சினைகளால் இன்று அதிகமானோர் தங்க முலாம் பூசப்பட்ட நகைகளைப் பயன்பாடு

கடந்த சில மாதங்களில் மட்டும், ஏற்பட்டுள்ள பொருளாதார பணவீக்கத்தால் நாடு முழுவதும் உள்ள மக்கள் சுமார் 600 கிலோ நகைகளை அடமானம் மற்றும் விற்பனை செய்துள்ளதாக நகை வர்த்தகத்தில் உள்ள தொழிலதிபர்கள் மற்றும் வங்கியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் காரணமாக புதிய நகைகளை கொள்வனவு செய்வது சுமார் 80 வீதத்தால் குறைந்துள்ளதாக கொழும்பில் செட்டியார் தெரு மற்றும் கிரான்பாஸ் பகுதிகளில் உள்ள பல நகைக்கடைகளின் உரிமையாளர்கள்தெரிவித்துள்ளனர்.

தற்போது நகைகளை அடகு வைத்து விற்பனை செய்ய ஆட்கள் வருவது அதிகரித்து வருவதாக கூறும் அவர்கள், இந்நிலையால் தங்களது வருமானம் வெகுவாக குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

பொருளாதாரப் பிரச்சினைகளால் இன்று அதிகமானோர் தங்க முலாம் பூசப்பட்ட நகைகளைப் பயன்படுத்துவதாகவும், இதன் காரணமாக வருமானம் குறைந்துள்ளதாகவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினர்.

வங்கி பெட்டகங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நகைகளை மீள்பெற்றுக்கொள்ள ஏராளமானோர் ஆசைப்படுவதாக பல வங்கிகளின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அண்மைக்காலமாக நகைக்கடைகள் மற்றும் நகைகளை கொள்ளையடிக்கும் சம்பவங்களும் கணிசமாக அதிகரித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Related posts

ராஜபக்‌ஷவை கொலையாளி என கூறியவர்களே! இன்று மோடியை வரவேற்க ஓடுகிறார்கள்.

wpengine

விக்னேஸ்வரனுக்கு அரசியல் தெரியாது! பா.உ.சரவணபவன்

wpengine

நாட்டின் இறைமையை பாதுகாக்க புதிய கட்சி

wpengine