பிரதான செய்திகள்

பொருளாதார மத்திய நிலையம் இன்றும் வாக்கெடுப்பு

பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்கும் இடம் தொடர்பில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 21 மேலதிக வாக்குகளால் ஓமந்தை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைப்பதா அல்லது தாண்டிக்குளத்தில் அமைப்பதா என்ற வாக்கெடுப்பு இன்று திங்கட்கிழமை யாழ். கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் பேரவைச் செயலகத்தில் நண்பகல் 12 மணிக்கு இடம்பெற்றது.

வாக்கெடுப்பில் வடமாகாணத்தைச் சேர்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் 30 பேருக்கு வாக்கெடுப்புச் சீட்டுக்கள் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் மற்றும் பதிவு தபால் மூலம் வாக்குச்சீட்டுக்கள் அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர் இன்று முதலமைச்சர் செயலகத்தில் வாக்கெடுப்பு இடம்பெற்றது.

ஓமந்தைக்கு ஆதரவாக முதலமைச்சர் உட்பட 17 மாகாண சபை உறுப்பினர்களும், தாண்டிக்குளத்திற்கு ஆதரவாக 3 மாகாண சபை உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர்.

அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் 10 பேரில் ஓமந்தைக்கு ஆதரவாக 3 பேரும், தாண்டிக்குளத்திற்கு ஆதரவாக 2 பேரும் வாக்களித்துள்ளனர்.

மொத்தமாக தாண்டிக்குளத்தில் அமைப்பதற்கு ஆதரவாக 5 வாக்குகளும், ஓமந்தையில் அமைப்பதற்காக 21 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

Related posts

மன்னார் தனியார் பேரூந்தின் உரிமையாளரான விமலதாசன் பலி! மனைவி படுகாயம்

wpengine

வில்பத்து தொடர்பான எமது நிலைப்பாடு

wpengine

இனவாதியான விக்னேஸ்வரன்,விமல் இருவரையும் கடலில் போட வேண்டும்

wpengine