பிரதான செய்திகள்

பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வுவாக அமெரிக்காவை சந்தித்த அனுரகுமார

நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க அமெரிக்க தூதுவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஜே.வி.பி தலைமை அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகத் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தூதுவரை சந்தித்து கலந்துரையாடிய அனுரகுமார திசாநாயக்க

இச்சந்திப்பு தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தமது ருவிட்டர் செய்தியில் தெரிவித்ததாவது,

“பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வுகளை நோக்கிச் செல்வதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக பலதரப்பட்ட அரசியல் பிரதிநிதிகளை நான் தொடர்ந்து சந்தித்து வருகிறேன். இன்று நான் அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்தேன். இதன்போது இலங்கையர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது” என தெரிவித்துள்ளார். 

Related posts

சமகால அரசியல் தொடர்பில் யாழ் கூட்டம்

wpengine

சூட்சகமான முறையில் கொழும்பில் கோடி கணக்கில் கொள்ளை!

Editor

ஏழை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்த வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரன்

wpengine