பிரதான செய்திகள்

பொரளஸ்கமுவ ஜும்ஆ பள்ளிவாசல் தாக்குதல் அஸாத் சாலி கண்டனம்

பொரளஸ்கமுவ ஜும்ஆ பள்ளிவாசல் மீது இன்று அதிகாலை 1.15 மணியளவில் இனம் தெரியாதவர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு முச்சக்கரவண்டிகளில் வந்தவர்களால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதன் காரணமாக பள்ளிவாசலுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் பள்ளிவாசலில் கடமையில் இருக்கும் முஅத்தின் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

பள்ளிவாசல் மீது தாக்குதல் இடம்பெற்ற செய்தியை கேள்வியுற்று அங்கு சென்றிருந்த முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அஸாத் சாலி தெரிவிக்கையில்,

பள்ளிவாசல் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட செய்தி கேள்வியுற்றதுடன் அங்கு சென்று நிலைமையை அவதானித்தேன். பள்ளிவாசலுக்கு நுழைவதற்கு 2 நுழைவாயில்கள் இருக்கின்றன. இரண்டையும் உடைத்துக்கொண்டு இந்த கும்பல் பள்ளியினுள் நுழைந்து பள்ளிவாசலில் இருந்த பொருட்கள் மீது சேதம் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பள்ளியினுள் இருந்த மின் விசிறி, கடிகாரம், குர்ஆன்கள் மற்றும் ஜன்னல்களுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளனது.

அத்துடன் பள்ளிவாசலுக்குள் தூங்கிக்கொண்டிருந்த முஅத்தின் மீதும் இவர்கள் தாக்கியுள்ளனர். காயமடைந்த அவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் வைத்தியசாலையில் இருந்து இன்று நண்பகல் வெளியேறியுள்ளார். இரு முச்சக்கர வண்டிகளில் வந்துள்ள இந்த கும்பளில் இரண்டு பேர் மாத்திரம் பள்ளிவாசலுக்கு நுழைந்து இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொரளஸ்கமுவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளோம். அத்துடன் பொலிஸ்மா அதிபருடன் தொடர்புகொண்டு சம்பவம் தொடர்பில் விளக்கம் அளித்தேன். பொலிஸ்மா அதிபர் பள்ளிவாசல் நிர்வாகசபை உறுப்பினர்களுடன் இன்று மாலை சம்பவம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். அத்துடன் பள்ளிவாசலுக்கு அருகில் இருக்கும் 2 நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கமராக்களை பரிசோதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. நாளைய தினம் குறிப்பிட்ட பாதுகாப்பு கமராக்கள் பரிசோதிக்கப்படவுள்ளன. அதன்பின்னர் குற்றவாளிகளை இனம் கண்டுகொள்ளலாம் என நம்புகின்றோம் என்றார்.

Related posts

தமிழ்,முஸ்லிம் மக்களை எனக்கு எதிராக திசை திருப்பட்டார்கள் – மஹிந்த

wpengine

மகளிர் சுயதொழில் சந்தையினை திறந்து வைத்த பிரதேச செயலாளர்

wpengine

வடக்கு கிழக்கு இணைந்தால் எந்த இடத்தில் இரத்த ஆறு உற்றெடுக்கும்

wpengine