பிரதான செய்திகள்

பொத்துவில் பிரதேசத்தில் பெற்றோர்கள் மேற்கொள்ளும் தொடர் போராட்டம்

(முர்ஷித் முஹம்மட்)

பொத்துவில் பிரதேசத்தில் நிலவுகின்ற பெருமளவான ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்கக் கோரியும் மெத்தனப்போக்கில் கண்மூடித்தனமாக இருக்கும் அதிகாரிகளின் நடவடிக்கைகளை கண்டித்தும் பொத்துவிலில் தொடர்ச்சியான எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறுகின்றன. கடந்த சில நாட்களாக பாடசாலைகளுக்கு எந்த பிள்ளைகளையும் அனுப்பாது பெற்றோர்கள் தங்கள் எதிர்பலைகளை பதிவு செய்கிறார்கள்.

இதயொட்டி கடந்த 25.10.2017 அன்று மாபெரும் கண்டன பேரணியும் நடாத்தப்பட்டது. தொடர்ந்தும் நிரந்தர தீர்வு கிடைக்காவிடில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் பெற்றோர்கள் சூளுரைத்துள்ளனர்.

இப்போதைய பொத்துவில் கல்வி கள நிலவரம் படுமோசமாக இருக்கின்றது. பொத்துவிலில் மொத்தம் 21 பாடசாலைகள் இருக்கின்றன.2016 கல்வி நிருவாக சுற்றுநிரூபத்தின் படி 460 ஆசிரியர்கள் தேவை. ஆனால் இருப்பதோ வெறும் 285 ஆசிரியர்கள். சுமார் 175 ஆசிரியர் பற்றாக்குறையோடு பொத்துவில் கோட்டம் தத்தளிக்கிறது. 175 ஆசிரியர்கள் இன்றி பொத்துவில் கோட்டம் இயங்குவதென்பது மிகுந்த வேதனையானது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பொத்திவில் கல்வி நிலையை சீர்படுத்தி மாணவர்கள் தடையின்றி கற்பதற்கு உதவ வேண்டும் என புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

Related posts

சமையல் எரிவாயுவின் விலையும் குறைகிறது!

Editor

நாளை வவுனியாவில் அனைத்து வர்த்தக நிலையம் பூட்டு

wpengine

துணிச்சலுக்கான சர்வதேச பெண்கள் விருதினைப் பெற்ற பெண் மன்னாரில் கௌரவிப்பு

wpengine