பிரதான செய்திகள்

பொத்துவிலில் தொடங்கிய தமிழ் உறவுகளின் போராட்டம்.

முகம்மத் இக்பால்

தேர்தல் காலங்களில் மக்களின் வாக்குகளை சூறையாடுவதற்காக ஆயிரம் பொய் வாக்குறுதிகளுடன் முஸ்லிம் தலைவர்கள் வீதியில் வலம்வந்துவிட்டு தேர்தலுக்கு பின்பு மறைந்துவிடுவார்கள்.

முஸ்லிம் மக்களுக்கு எத்தனை ஆயிரம் பிரச்சினைகள் வந்தாலும் சிலர் ஊடக அறிக்கையை மட்டும் வழங்கிவிட்டு உல்லாச வாழ்க்கையை தொடர்வார்கள்.ஆனால் வேறு சிலர் அவ்வாறான அறிக்கைகூட வழங்காமல் தங்களது சொந்த வியாபாரத்தை மட்டுமே கவனிப்பார்கள்.

இவர்கள் அனைவரும் அடுத்த தேர்தல் வந்ததால் மட்டுமே மீண்டும் உரிமை முழக்கத்துடன் வீதிக்கு வருவார்கள். அதுவரைக்கும் அனைத்து முஸ்லிம் மக்களையும் உயிருடன் தீயிட்டாலும் இவர்களால் எதுவும் செய்ய முடியாது.

ஏனெனில் இவர்களிடம் உணர்வுமில்லை, துணிச்சலுமில்லை. சுருக்கமாக கூறினால் முதுகெலும்பு இல்லாத கோழைகள்.ஆனால் தமிழ் தலைவர்கள் அவ்வாறல்ல. உணர்வுகளுடன் மக்களின் உரிமைக்காக பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், கொட்டும் மழையிலும், நீதிமன்ற தடையையும் மீறி துணிச்சலுடன் வீதியில் இறங்கி போராடுவது பாராட்டத்தக்கது.தமிழ் தலைவர்களின் வழிநடாத்தலுடனான இந்த போராட்டத்தை பார்க்கின்றபோது முஸ்லிம் மக்கள் தலைமைகள் இல்லாத அனாதைகளாக இருப்பதை உணர முடிகின்றது.எனவே பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான தமிழ் உறவுகளின் போராட்டம் வெற்றிபெற

வாழ்த்துக்கள்.

Related posts

ஹக்கீமின் உயர்பீடம் சுயநல அரசியல் தேவைக்காகவே இருக்கின்றது.

wpengine

இனங்களுக்கிடையில் கசப்புணர்வு ஏற்படாத வகையில் அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட வேண்டும்

wpengine

புதிய அமைச்சரவை! தற்போதைய நெருக்கடி நிலைமை மோசமடையும் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க

wpengine