பிரதான செய்திகள்

பொதுவிடுமுறை நாட்களை நீடிப்பது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை

பொதுவிடுமுறை நாட்களை நீடிப்பது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.


இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட நிர்வாக அமைச்சின் செயலாளர் இதனை கூறியுள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


நாட்டின் ​​நிலைமையைக் கண்காணித்த பின்னர் பொதுவிடுமுறையை நீடிப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.
இப்போதைக்கு பொது விடுமுறை நீட்டிக்கப்படாது. தேவைப்பட்டால் அது தொடர்பில் பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.


இலங்கையில் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இன்று இலங்கையில் அரச பொதுவிடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts

அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்த சவுதி

wpengine

ஜனாதிபதி பதவியேற்று 10 நாட்கள்! இன்று என்ன நடக்கிறது

wpengine

ரணிலின் சகோதரனின் தொலைக்காட்சி சேவைக்கு சீல்

wpengine