பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

பொதுபலசேன ஞானசாரதேரர் அவர்களை வன்னித்தமிழ் இளைஞர் கழகம் வரவேற்கின்றோம்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை  (Galagoda Aththe Gnanasara Thero) வரவேற்கும் துண்டுப்பிரசுரங்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளன.

பொதுபலசேன ஞானசாரதேரர் அவர்களை வன்னித்தமிழ் இளைஞர் கழகம் வரவேற்கின்றோம் என்ற துண்டுப்பிரசுரங்கள் முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டத்தில்  பரவலாக ஒட்டப்பட்டுள்ளன. ஒரே நாடு, ஒரே சட்டம் செயலணியின் வடக்கிற்கான பயணம் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான கருத்தறியும் கூட்டம் ஞானசார தேரர் தலைமையிலான செயலணியின் பங்குபற்றுதலுடன் 21.11.21 இன்று தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

நாளை 22.11.21 முல்லைத்தீவு ,கிளிநொச்சி மாவட்டங்களுக்கு ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி பயணங்களை மேற்கொண்டு சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ள நிலையில் வன்னித்தமிழ் இளைஞர்கழகம் வரவேற்று துண்டு பிரசுரங்களை ஒட்டிவைத்துள்ளதுடன் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டத்தின் வீதிகளில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பரந்தன் புதுக்குடியிருப்பு வீதியில் ஆங்காங்கே துப்பாக்கி ஏந்திய இராணவத்தினர் கடமையில் நிற்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சாக்கடை அரசியலுக்காக குடும்ப உறவுகளை பிரிக்கும் அமைச்சர் ஹக்கீம்

wpengine

பாலஸ்தீனத்தில் 17 வயது சிறுவன் சுட்டுக்கொலை – இஸ்ரேலிய காவல்துறை

wpengine

கடந்துவந்த தடங்களும் நம்பிக்கையில்லாப் பிரேரணையும் முஸ்லிம் பார்வை: பாகம்-2

wpengine