பிரதான செய்திகள்

பொதுபல சேனாவுடனான தனது சகோதரிக்கு உள்ள உறவு தொடர்பில் அஸாத் சாலி விளக்கம் அளிக்க வேண்டும்.

அஸாத் சாலியின் சகோதரியின் சுகயீனத்திற்கு  பொதுபல சேனாவிடம்  நிதி உதவி செய்யுமாறு கோரிக்கை விடுப்பதன் மர்மம் என்ன என களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த கேள்வி  எழுப்பியுள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர்..

அஸாத் சாலியின் சகோதரி சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக பொதுபல சேனாவிடம் தஞ்சம் அடைந்திருந்தது நம்மில் பலரும் அறிந்த உண்மையாகும்.

கடன் பிரச்சினை ஒன்றில் மாட்டிவிட்டதாக கூறி பொதுபல சேனாவில் அடைக்களம் கோரிய அஸாத் சாலியின் சகோதரி அவ்வமைப்பின்  முக்கியஸ்தர் டிலந்த வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.இரண்டு மாதங்களுக்கு மேலாக அங்கே அவர் தங்கியிருந்தார்.

டிலந்த விதானகே அஸாத் சாலியின் சகோதரிக்கு அடைக்கலம் வழங்கியமை தொடர்பில் அவரது  அயல் வீட்டார்கள் சாட்சியம் கூறுவார்கள்.

இந்த விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவை சந்தித்த முஸ்லிம்களும் குறிப்பிட்டிருந்தனர்.

இது ஒருபுறம் இருக்க.அண்மையில் ஒரு முஸ்லிம் தலைவர் என்று கூறிக்கொள்பவரின் சகோதரி புற்று நோயால் அவதிப்படுவதாகவும் அவர் தங்களிடம் உதவி கோருவதாகவும் பொதுபல சேனாவிடம்  அந்த முஸ்லிம் சகோதரி உதவிகோருவதால் அவரை புறக்கணிக்க வேண்டாம் எனவும் முஸ்லிம்கள் அவருக்கு உதவுமாறும் டிலந்த முகநூல் மூலம் கோரியிருந்தார்.

இதில் நாம் ஒரு விடயத்தை நன்கு புரிந்துகொள்ள வேண்டும் அஸாத் சாலியை மாட்டிவிட டிலந்த இந்த உதவிகோரலை முன்வைத்தார்  என நாம் கருத முடியாது காரணம் அவருக்கு அவ்வாறான ஒரு நோக்கம் இருந்திருந்தால்முகநூலில் பெயர் குறிப்பிட்டு  ஊடக மாநாட்டில் பெயர் குறிப்பிட்டு  கோரிக்கை முன்வைத்திருக்கலாம்.ஆனால்,அவர் அவ்வாறு செய்யாவில்லை.

அது தவிர முஸ்லிம் பிரமுகர்கள் சிலரை டிலந்த தொடர்புகொண்டு அஸாத் சாலியின் சகோதரியின் நோய்க்கு உதவுமாறும் கோரியுள்ளார்.

பொதுபல சேனாவுக்கு அஸாத் சாலியின் சகோதரிக்கும் என்ன தொடர்பு என்பதை அஸாத் சாலி நாட்டுமுஸ்லிம்களுக்கு தெளிவுபடுக்த வேண்டும் எனவும் அதனை செய்யாத பட்சத்தில் அஸாத் சாலி தொடர்பான பலவிடயங்களை நாம் அம்பலப்படுத்துவோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

ஹக்கீம் முதல் இறுதியாக இணைந்த முசலி! ஹுனைஸ் வரை “வில்பத்து ரிஷாட்டின் நாடகம்” எனக் கூறியவர்களே!

wpengine

அஷ்ரஃபின் ஆழப்பார்வையில் ஆரூடமாயிருந்த அர்த்தங்கள்

wpengine

இளவரசர் ஹரியின் திருமண மோதிரத்தின் இரகசியம்

wpengine