பிரதான செய்திகள்

பொதுபல சேனாவுக்கு அதிகாரம் வழங்கியது உங்கள் ஜனாதிபதியே! எஸ்.பி தெரிந்து கொள்ள வேண்டும்.

பொதுபல சேனாவுக்கு அதிகாரம் வழங்கியது உங்கள் ஜனாதிபதியே : தவளை வாயர் எஸ் பி திசாநாயக்க தெரிந்து கொள்ளவேண்டும்.

பொதுபல சேனாவின் மஹியங்கனை அமைப்பாளருக்கு சுதந்திர கட்சி மஹியங்கனை அமைப்பாளர் பதவிகொடுத்து அழகு பார்த்தது ஜனாதிபதி மைதிரிபால சிரிசேன என்பதை தவளை வாயர் எஸ் பி திஸாநாயக்கவுக்கு தான்கூறிவைக்க விரும்புவதாக களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்..

கடந்த ஜனாதிபதி தேர்தலில் இனி இல்லை என்ற அளவுக்கு சந்திரிக்காவையும் மைத்ரியையும் விமர்சித்த தவளை வாயர் எஸ் பி திஸாநாயக்க தற்போது பொதுபல சேனா விடயத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளரை விமர்சித்துவருகிறார்.

ஞானசார ஹிமிக்கு உதவியவர்கள் சம்பிக்க குழுவினர் என்பது இப்போது நிருபணமாகி வரும் வேளையில்முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மீது பழி போடுவது அரசியல் நோக்கம் கொண்டது.

அப்படி அவருக்கு தொடர்பு இருந்திருந்தால் அலுத்கமை கலவரத்துக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அமைத்து அவரை குற்றவாளி ஆக்கியிருப்பார்கள். சம்பிக்க ரணவக்க பின்னால் இருப்பதால் தான் இதுவரை அலுத்கமை விடயத்தைஅரசாங்கம் விசாரிக்கவில்லை.

பொதுபல சேனாவுக்கு அடைக்களம் வழங்குவது யார் என்பது தொடர்பில் உங்கள் ஜனாதிபதியால் அண்மையில் மஹியங்கனை அமைப்பாளராக நியமிக்கப்பட்ட பொதுபல சேனா மஹியங்கனை அமைப்பாளரிடம் கேட்டுதெரிந்து கொள்ளுங்கள் என தான் தவளை வாயர் எஸ் பியிடம் கேட்டுக்கொள்வதாக பியல் நிஷாந்த குறிப்பிட்டுள்ளார்.

பொதுபல சேனா மஹியங்கனை அமைப்பாளருக்கு சுதந்திர கட்சி அமைப்பாளர் பதவி வழங்கிய ஜனாதிபதிஞானசார தேரருக்கு தேசிய அமைப்பாளர் பதவி வழங்கி வைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என அவர்குறிப்பிட்டுள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பெண்ணுக்கு கொரோனா! மினுவாங்கொடயில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு

wpengine

முதியவரின் முகக் கவசத்தில் ஒழிந்த பீடி! முதியவரின் இச்செயற்பாட்டை பார்த்து சிரித்த பொலிஸார்.

wpengine

25 வயது இளைஞரின் காதலி வழக்கு விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை

wpengine