பிரதான செய்திகள்

பொதுபல சேனாவின் முக்கியஸ்தரை பதவி நீக்க வேண்டும்! வட்டரக்க

ஜனாதிபதி செயலகத்துக்கு முன் வட்டரக்க விஜித தேரர் இன்று -01- செவ்வாய்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறிலாங்கா சுதந்திரக் கட்சியின் மஹியங்கண பிரதேச அமைப்பாளராக நியமிக்கப்பட்ட பொதுபல சேனா முக்கியஸ்தரை, அந்தப் பதவியிலிருந்து நீக்குமாறு கோரி, ஜனாதிபதி செயலகத்தின் முன்னால், இன்று காலை முதல், வட்டரக்க தேரர் உண்ணாவிரதம் இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்,  தேரர் உண்ணாவிரதம் இருந்த நிலையில் அவ்விடத்துக்கு வந்த பொதுபல சேனா அமைப்பினர், தேரரை அச்சுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அடுத்த ஜனாதிபதி எவர்? என்பது எல்லோர் மனதிலும் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

wpengine

மக்களே அவதானம் ! பிளாஸ்டிக் முட்டையை அடுத்து பிளாஸ்டிக் அரிசி

wpengine

முகத்தை மறைப்பதற்கு தடை – பாராளுமன்றம் ஒப்புதல்

wpengine