பிரதான செய்திகள்

பொதுபல சேனா முறைப்பாடு!அமைச்சர் றிஷாட் ,சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு எதிராக விசாரணை

இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக கிடைத்துள்ள 21 முறைப்பாடுகளுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், அமைய, கலகொட அத்தே ஞானசார தேரர், அமைச்சர் றிஷாட் பதியுதீன், வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நபர்களுக்கு எதிராக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் அடங்கிய குரல் பதிவுகளை ஊடக நிறுவனங்களிடம் இருந்து பெற்று விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதுடன் அது தொடர்பான விடயங்கள் நீதிமன்றத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனை தவிர கடந்த மே மாதம் 16 ஆம் திகதி முதல் மத வழிபாட்டு தளங்கள்,வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் பிரியந்த ஜயகொடி குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

வவுனியா மசாஜ் நிலையம் மூடப்பட்டுள்ளது.

wpengine

“மீண்டும் எழுவோம்’ தீவிர பரப்புரையில் பொது பலசேனா அமைப்பு

wpengine

ரோஸி சேனாநாயக்கவின் கொழும்பு குழு யாழ் விஜயம்

wpengine