பிரதான செய்திகள்

பொதுத் தேர்தல் உயர் நீதிமன்றத்திற்கும் செல்லும் தேவை ஏற்படாது.

பொதுத் தேர்தல் மற்றும் புதிய நாடாளுமன்றத்தை கூட்டும் தினம் சம்பந்தமாக உயர் நீதிமன்றத்திற்கும் செல்லும் தேவை ஏற்படாது என ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவுக்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


பொதுத் தேர்தலை மே மாதம் 28ம் திகதி அல்லது அதற்கு முன்னர் நடத்த முடியாது என்று இந்த சந்தர்ப்பத்தில் அறிவிக்க முடியாது எனவும் தேர்தல் தினத்தை முடிவு செய்வது தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பு என்பதால், அதில் தலையிட ஜனாதிபதி விரும்பவில்லை எனவும் ஜனாதிபதியின் செயலாளர் அறிவித்துள்ளார்.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் இந்த கடிதத்தை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பியுள்ளார்.


கடந்த மார்ச் 31ம் திகதி மற்றும் ஏப்ரல் முதலாம் திகதி தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அனுப்பிய கடிதங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related posts

6 உறுப்பினருக்கு 477 பேர் வன்னியில் தேர்தலில் போட்டி

wpengine

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , மஹிந்த ராஜபஷ்சவின் புகைப்படங்கள்

wpengine

இத்தாலி வரலாற்றில் பெண் முதல் நகர முதல்வர்

wpengine