பிரதான செய்திகள்

பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவாக செயற்பட்டவர்களுக்கும் அமைச்சு பதவிகள் வேண்டும்!-சாகர காரியவசம்-

பொதுஜன பெரமுனவுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படும் போது பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவாக செயற்பட்டவர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசாங்கம் எடுத்த ஒருசில தவறான தீர்மானங்களினால் பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்தது என்பதை ஏற்றுக்கொள்வதாகவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்திரமான அரசாங்கத்தை ஸ்தாபிக்க சகல அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளதாக சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

Related posts

மீண்டும் மழையால் பாதிக்கப்பட்ட மட்டக்களளப்பு – போக்குவரத்துக்கு ஏட்பட்ட பாதிப்பு .

Maash

மு.கா.தவிசாளரிடமிருந்து உயர்பீட உறுப்பினர்களுக்கு ஒரு மடல்

wpengine

சவூதி அரேபியாவின் நெருக்கடி! இஸ்ரேல் நாட்டில் தடை

wpengine