பிரதான செய்திகள்

பொதுஜன பெரமுனவில் இணைந்து கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை

ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெயான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

பொதுஜன பெரமுனவுடன் இணையவுள்ள இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சில சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. அந்த பேச்சுவார்த்தைகள் பெரும்பாலும் வெற்றியளித்துள்ளது.

இதனடிப்படையில், இவர்கள் அடுத்த சில தினங்களில் பொதுஜன பெரமுனவுடன் இணைவார்கள்.

மக்களின் நிலைப்பாட்டுக்கு சார்பான எவரும் தமது அணியுடன் இணைவார்கள் எனவும் ஷெயான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

103 பேரின் உயிரை பறித்த நைஜீரியா படகு விபத்து!

Editor

அந்த நபரை விடுவிக்குமாறு இராணுவ தளபதியிடம் நான் கோரவில்லை அமைச்சர் றிஷாட்

wpengine

களுத்துறையில் இடம்பெற்ற மீலாத் விழா

wpengine