பிரதான செய்திகள்

பொது மக்களுக்கு அறிவித்தல்! வவுனியாவில் சுவரொட்டிகள்

வவுனியா – பழைய பேருந்து நிலையம் 31ஆம் திகதியில் இருந்து செயற்படாது என வவுனியா நகரசபையில் பொது மக்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபையின் செயலாளரினால் கையொப்பமிட்டு பழைய பேருந்து நிலையத்தில் அறிவித்தல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

வடமாகாண முதலமைச்சரின் பணிப்புரைக்கமைய வவுனியா நகரசபைக்குரிய பேருந்து நிலையம் இன்று நள்ளிரவு 12 மணியில் இருந்து மூடப்படவுள்ளதால் இன்றில் இருந்து பொது மக்கள் தமது பிரயாணங்களை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து பேருந்துகளும் சேவையில் ஈடுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

பொதுபல சேனாவின் முக்கியஸ்தரை பதவி நீக்க வேண்டும்! வட்டரக்க

wpengine

சுசந்திகா ஜயசிங்க வைத்தியசாலையில்! கணவர் கைது

wpengine

கடவுச்சீட்டு விநியோகிப்புக் கட்டணங்கள் உயர்வு

wpengine