பிரதான செய்திகள்

பேஸ்புக்கில் வெளியான படம்! பொது மக்கள் எதிர்ப்பு

சங்கிலி திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாயின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானமையால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் பரிசோதகரே இவ்வாறு புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

பொலிஸ் பரிசோதகரினால் தனது பேஸ்புக்கில் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டமைக்கு பொது மக்களால் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த புகைப்படங்கள் நீக்கப்பட்ட போதும், பொலிஸ் துறையின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நெவில் பிரியந்த என்ற பொலிஸ் பரிசோதகரினால் கைது செய்யப்பட்ட நபரின் புகைப்படங்களே இவ்வாறு வெளியாகி உள்ளன.

நீதிமன்றத்தில் குற்றவாளியாக அறிவிப்பதற்கு முன்னர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவரின் புகைப்படங்களை வெளியிட முடியாது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Related posts

சற்றுமுன் வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து

wpengine

நஸீர் அஹமட் தன்னை ஓர் அவமானச் சின்னமாக மாற்றிக்கொண்டுள்ளார்-ரவூப் ஹக்கீம்

wpengine

திங்கள் கிழமை இரண்டாம் தவணைக்கு பாடசாலைகள் திறக்க வேண்டும்

wpengine