தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

பேஸ்புக் வேலைக்கு 10லச்சம் கொடுக்கும் சஜித்,கோத்தா

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் கோத்தபாய ராஜபக்ச மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரின் தேர்தல் பிரசாரத்திற்கு உதவியை பெற்றுக்கொள்வதற்காக அவர்கள் சம்பந்தப்பட்ட கட்சிகள் சுமார் 20 கணனி ஹேக்கர்களை வரவழைத்துள்ளதாக தெரியவருகிறது.


இவர்கள் இந்தியா, சீனா, வியட்நாம் மற்றும் தாய்வான் நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.

தமது வேட்பாளர்கள் சம்பந்தமாக சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரம் செய்யப்படும் அவதூறான தகவல்களை தடுப்பது இவர்களின் பிரதான பணியாகும்.

அடுத்த இரண்டு வாரங்களில் இந்த ஜனாதிபதி வேட்பாளர்கள் சம்பந்தமாக அவதூறான தகவல்கள் சமூக ஊடகங்கள் மூலம் பிரசாரம் செய்யும் வாய்ப்புள்ளதாக கிடைத்துள்ள தகவல்களே இந்த வெளிநாட்டு ஹேக்கர்களின் உதவியை பெற்றுக்கொள்வதற்கான காரணம் எனவும் பேசப்படுகிறது.

ஒரு சமூக வலைத்தளத்தை ஹேக் செய்ய இவர்களுக்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொகையை வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.

Related posts

மட்டு,மாவட்டத்தில் கடமை நிறைவேற்று அதிபர்களை சேவை அடிப்படையில் நிரந்தரமாக்கவும் -அமீர் அலி

wpengine

வவுனியாவில் நாளை ஊடக செயலமர்வு

wpengine

கண்டி சம்பவம் தொடர்பில் அமைச்சர் ஹக்கீமின் இரட்டை வேடம்

wpengine