உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

பேஸ்புக் விளம்பரம் இந்தியாவில் வழக்கு பதிவு

சமூக வலைத்தளங்களில் முறையான அனுமதியின்றி விளம்பரம் செய்ததாக பா.ஜ.க மற்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரகிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி பா.ஜ.கவை சேர்ந்த அதுல் கார்க் மற்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த சுரேஷ் பன்சால் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் காசியாபாத் நகருக்கான சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்வது குறித்து பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரியான நிதி கேசர்வானி விதித்திருந்தார். இந்நிலையில் முறையான அனுமதி பெறாமல் இருவரும் சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்ததாக இருவர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விதிமுறைகளை மீறும் வேட்பாளர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் வாட்ஸ்அப் எண் மற்றும் இலவச அழைப்பு எண் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related posts

முட்டை உற்பத்தி வெப்பத்தால் 30 சதவீதம் சரிவு

wpengine

ஜனாதிபதி மற்றும் பிரதமரை சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் சந்தித்தார்.

wpengine

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அவரது மனைவிக்கு கொரொனா

wpengine