தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

பேஸ்புக் பயன்படுத்தினால் ஆயுள் அதிகரிக்குமென ஆய்வில் தகவல்

பேஸ்புக் சமூக வலைத்தளத்தை அதிகம் பயன்படுத்துவோரின் வாழ்நாள் அதிகரிப்பதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

கலிஃபோர்னியா சான் டியெகோ பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் இணைந்து, ஃபேஸ்புக் பயன்பாட்டிற்கும் மனித ஆயுளுக்கும் உள்ள தொடர்பு குறித்த ஆய்வை அண்மையில் மேற்கொண்டனர்.

கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் மற்றும் அவர்களைக் குறித்த அந்த மாகாண பொது சுகாதாரத் துறையின் புள்ளிவிபரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

1945 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரை பிறந்தவர்களும் முகநூலில் கடந்த 6 மாதங்களாக அவர்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

அந்த ஆய்வில், ஃபேஸ்புக்கை அறவே பயன்படுத்தாதவர்களைவிட, ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.

ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களைவிட அதனைப் பயன்படுத்தாதவர்கள் உடல்நலக் குறைவால் மரணமடைவதற்கான வாய்ப்பு 12 சதவீதம் அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களிடையே, அதிக அளவில் ஃபேஸ்புக் நண்பர்களைக் கொண்டிருப்பவர்களும், அதிக படங்கள், தகவல்கள், கருத்துகள் ஆகியவற்றைப் பதிவிட்டவர்களும், குறைந்த எண்ணிக்கையில் பதிவிட்டவர்களைவிட நீண்ட ஆயுளைக் கொண்டிப்பதையும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பொதுவாக அதிக அளவில் சமூகத் தொடர்புகளைக் கொண்டிருப்பவர்கள் நீண்ட காலம் வாழ்வார்கள் என்று ஏற்கனவே பல ஆய்வு முடிவுகள் கூறியதை, முகநூல் அடிப்படையிலான இந்த ஆய்வும் நிரூபிக்கிறது.

எனினும், நிதர்சனத்திற்கு அப்பாற்பட்ட, நேரடித் தொடர்பு இல்லாத மாயையான நட்புகளை அதிகம் கொண்டிருப்பவர்களுக்கு ஃபேஸ்புக் பயன்பாடு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதும் புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Related posts

முல்லைத்தீவில் வலம்புரி சங்குடன் இருவர் கைது

wpengine

முச்சக்கரவண்டிகளுக்கு இலவச மீற்றர்

wpengine

இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைப்பதற்கு நான்கு நாடுகள் சம்மதம்-அமைச்சர் அலி சப்ரி

wpengine