உலகச் செய்திகள்தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

பேஸ்புக் பதிவேற்றம் இளம்பெண் தற்கொலை! பெண்களே!

ஆபாசமாக உருமாற்றம் (morphing) செய்யப்பட்ட புகைப்படத்தினை பேஸ்புக்கில் மர்ம நபர் வெளியிட்டதால் மனமுடைந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் இந்தியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் சேலம் மாவட்டத்தினை சேர்ந்த வினுப்பிரியாவின்  பேஸ்புக் கணக்கிலிருந்த படத்தை எடுத்த மர்மநபர் ஆபசமாக உருமாற்றி அதனை அவரது கணக்கிலே பதிவேற்றியுள்ளார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வினுப்பிரியா, இது குறித்து வீட்டில் தெரிவிக்கவே, வினுப்பிரியாவின் பெற்றோர் இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இது தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவந்தனர். முறைப்பாடு கொடுத்து ஒரு வாரம் கடந்த நிலையில், அந்த மர்ம நபர் மீண்டும் வினுப்பிரியா படத்தை உருமாற்றம் (morphing) செய்து மற்றொரு படத்தை இன்று பதிவேற்றியுள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்குள்ளான வினுப்பிரியா, இன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த வாரம் முறைப்பாடு கொடுத்த போதே பொலிஸார் தகுந்த நடவடிக்கையினை எடுத்திருந்தால் தம் மகளின் உயிரை இழந்திருக்க தேவையில்லை என்று வினுப்பிரியாவின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related posts

பிரபாகரன் இளம் பெண்களை ஏமாற்றி! என்னையும் ஏமாற்றியுள்ளார்

wpengine

மன்னார் வைத்தியசாலையில் விபத்துக்கான ஒத்திகை

wpengine

வில்பத்து -உப்பாற்று பகுதியில் மண் அகழ்வும் கடற்படையினர்.

wpengine