பிரதான செய்திகள்

பேஸ்புக் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக முறைப்பாடு

மேல் மாகாண சபை உறுப்பினர் நிஷாந்த ஶ்ரீ வர்ணசிங்க, சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களுக்கு எதிராக பொலிசில் முறைப்பாடொன்றைச் செய்துள்ளார்.

பெர்பெச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன் அலோசியஸ் இடமிருந்து 118 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றுக் கொண்டுள்ளதாக அண்மையில் தகவல்கள் வௌியாகியிருந்தன.

இந்நிலையில், பணம் பெற்றுக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று பலரின் பெயர்களை குறிப்பிட்டு போலியான தகவல்களின் அடிப்படையில் சமூகவலைத்தள செயற்பாட்டாளர்கள் பிரச்சாரம் ஒன்றை மேற்கொண்டு வருவதாக நிஷாந்த ஶ்ரீ வர்ணசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.

இவ்வாறான சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும் என்று அவர் பொலிஸ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளார்.

ஜாதிக ஹெலஉறுமய கட்சியின் தேசிய அமைப்பாளராக நிஷாந்த ஶ்ரீ வர்ணசிங்க, ஜனாதிபதியின் விசேட செயற்திட்டங்களுக்கான கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பு பணிப்பாளராகவும் கடமையாற்றுகின்றார்.

Related posts

உள்ளூராட்சி மன்ற தேர்தல்! திருத்தம் நிறைவேற்றம்

wpengine

சீருடை வவுச்சர் காலம் நீடிப்பு

wpengine

பௌத்த மதத்திற்கு எந்த இடையூறுகளும் ஏற்படாது -விஜேதாச ராஜபக்ஷ

wpengine