பிரதான செய்திகள்

பேஸ்புக் காதல் முறிவு! அதிரடிபடை வீரர் தற்கொலை

பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகை வளாகத்தில் அதிரடிபடை வீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
பேஸ்புக் ஊடாக ஏற்பட்ட காதல் உறவு முறிந்தமையினால், விரக்தியடைந்த நிலையில் தற்கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேற்று காலை குறித்த அதிரடிபடை வீரர் தனது கடமைக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வரக்காபொல பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான தில்ருக் சமரசிங்க என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பேஸ்புக் காதலிக்கு எழுதிய கடிதம் ஒன்று உயிரிழந்த அதிரடிபடை வீரரின் உடமையிலிருந்து பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தாயான இந்த பெண் சில காலங்களாக பேஸ்புக் ஊடாக இந்த அதிகாரியுடன் தொடர்பு ஒன்றை ஏற்படுத்தி கொண்டுள்ளார்.

எனினும் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக விரிசல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

சவுதி மன்னருக்கு அல்கொய்தா எச்சரிக்கை

wpengine

ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகளுக்கு விளக்கம்

wpengine

மாட்டிறைச்சி தின்றாலும் நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது

wpengine