பிரதான செய்திகள்

பெரும் போகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்குத் தேவையான நிதி தற்போது நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு.!

பெரும் போகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகள் தற்போது நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

அதன்படி, நெல் சந்தைப்படுத்தல் சபை நெல் கொள்முதல் நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நேற்றிரவு (03) அத தெரணவில் ஒளிபரப்பான 360 நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் இதனை தெரிவித்தார்.

நாட்டில் அரிசி மாஃபியாவைக் கட்டுப்படுத்த முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

“இன்று முதல் ஒரு வாரத்திற்குள் உத்தரவாத விலை தீர்மானிக்கப்பட வேண்டும் என்பது தெளிவாகிறது. ஆனால் அதில் பெரும்பகுதி விவசாயிகளின் பக்கம் உள்ளது. நான் அரசாங்கத்தில் இருப்பதால் இதைச் சொல்லவில்லை. விவசாயி மற்றும் நுகர்வோர் இருவரையும் பாதுகாக்கும் நிலைப்பாட்டை எடுத்த முதல் அரசாங்கம் தேசிய மக்கள் சக்தி கட்சி அரசாங்கமாகும். பணத்தை விடுவிப்பதற்கு ஒரு செயல்முறை உள்ளது. பணம் விடுவிக்கப்பட்டுள்ளது, இப்பொழுது நீங்கள் நெல்லை வாங்கலாம். நாளை முதலே ஆரம்பிக்க முடியும்.”

Related posts

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் மேலும் வர்த்தகமானி

wpengine

அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக அத்துரலியே ரத்ன தேரர் பா.உ

wpengine

கால்நூற்றாண்டுகால கஷ்டங்களுக்கு கரம் கொடுத்தவர்..!

wpengine