செய்திகள்பிரதான செய்திகள்

பெருந்தோட்ட மக்களுக்கு சம்பள அதிகரிப்புடன், 10 பேர்ச் காணி.!

பெருந்தோட்ட மக்களுக்கு சம்பள அதிகரிப்பு மாத்திரமின்றி, 10 பேர்ச் காணி வழங்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார்.

நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

வரவு – செலவு திட்டத்திலும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம் வழங்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உறுதியளித்திருக்கின்றார். இந்த சம்பள அதிகரிப்பு விரைவில் பெற்றுக் கொடுக்கப்படும் என்று உறுதியளிக்கின்றோம்.

பெருந்தோட்டக் கம்பனிகளுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த மக்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

எனவே அவர்களுக்கு சம்பள அதிகரிப்பு மாத்திரமல்ல, அடிப்படை உரிமைகள் கூட கிடைக்கவில்லை. அவர்களுக்கென சொந்த காணி இல்லை. வீடு இல்லை.

எனவே இவ்வாண்டில் பெருந்தோட்ட மக்களுக்கு 6000 வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். ஒரு வீட்டுக்கு 28 இலட்சம் நிதி ஒதுக்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய நிதியுதவியுடன், அரசாங்கத்தின் நிதியும் இதற்காகப் பயன்படுத்தப்படும். 10 பேர்ச் என்ற அளவில் பெருந்தோட்ட மக்களுக்கு காணி வழங்க எதிர்பார்க்கின்றோம்.

இவை மாத்திரமின்றி தேயிலை உற்பத்தி துறையை மேலும் மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு நாம் பொறுப்பு கூறுவோம் என்றார்.

Related posts

சிங்கள மொழியில் கற்பதற்கு ஒரு சிறந்த பாடசாலையாக மாற்றப்பட்டுள்ள கொழும்பு ஏ.ஈ. குணசிங்க வித்தியாலயம்.

wpengine

பத்து கோடி ரூபா நிதியில் தெரு விளக்கு திறந்து வைத்த ஹிஸ்புல்லாஹ்

wpengine

கூட்டுக்களவாணிகள் கூட்டு சேர்ந்து ஆட்சியமைக்கின்றனர். அமைச்சர் சந்திரசேகர்

Maash