பிரதான செய்திகள்

பெரமுனவின் நிறுவனர் பசில் ராஜபக்ஷவினால் ரணிலுக்கு உறுதி

2020ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் வரை பொதுத் தேர்தல் நடத்தப்படாதென ஸ்ரீலங்கா பொது பெரமுனவின் நிறுவனர் பசில் ராஜபக்ஷவினால் உறுதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வேண்டுகோளுக்கு அமைய இந்த வாக்குறுதி பசில் ராஜபக்ஷவின் வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் தங்கியிருந்த பசில் ராஜபக்ஷவுடன், ரணில் தொலைபேசி உரையாடல் ஒன்று மேற்கொண்டுள்ள நிலையில் இந்த வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன்போது நாட்டின் அரசியல் நிலைமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அரசாங்கம் என்ற ரீதியில் முகம் கொடுக்க வேண்டிய பல பிரச்சினைகள் மற்றும் கட்சி ரீதியான பல பிரச்சினைகள் உள்ளன.

இதனால் அதற்கு தீர்வு தேட காலம் அவசியம் என பசில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பொதுத் தேர்தல் நடத்தப்படும் தினம் தொடர்பான இறுதி தீர்மானம் தன்னாலேயே மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஓகஸ்ட் மாதம் வரை காலம் உள்ளதென்பதனால் அவசர தேர்தலுக்கு செல்வதற்கு எந்த அவசியமும் இல்லை என பசில் உறுதியாக கூறியுள்ளார்.

பசிலின் உறுதியடுத்து ரணில் விக்ரமசிங்க மகிழ்ச்சியுடனும், நிம்மதியாகவும் காலத்தை கழிப்பதாக நெருங்கிய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதென சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Related posts

வரட்சி உலர் உணவு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை

wpengine

ஆட்டிடம் அனுமதி பெற்றே பின்னரே ஆட்டுடன் உடலுறவு

wpengine

இலங்கையர் 12 பேர் காயம்! சவுதி அரேபியாவின் விமானநிலையம் மீது ஆளில்லா விமான தாக்குதல்

wpengine